"எம்.ஜி.ஆர். நடிப்பதை நிறுத்திய பிறகு.. நானும் படம் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்"- ஓபிஎஸ்

 
ops

தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

OPS Press Meet: டிடிவி தினகரனை நேரில் சந்திக்க தயார் - ஓபிஎஸ் அதிரடி பேட்டி-ops  press meet at trichy - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்


திருச்சி மாவட்டம், முசிறியில் ஓபிஎஸ் அணி தெற்கு மாவட்ட  செயலாளர் ராஜ்மோகன் இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவில் ஓ. பன்னீர்செல்வம்  கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அரசு பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் முன் செய்த தீவினைப் பயனால் மாற்றுத்திறனாளியாக பிறப்பதாக சொற்பொழிவாளர் ஒருவர் பேசிய நிகழ்வு சர்ச்சையாகி உள்ளது. இந்தியா, தமிழகம் மதச்சார்பற்ற ஜாதி வேறுபாடு அற்ற தமிழகமாக உள்ளது. யாரையும், பிரித்துப் பார்த்து பேச கூடாது. ஜாதி, பேதம் அற்ற சமுதாயத்தில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுவி, புரட்சித்தலைவி ஜெயலலிதா வளர்த்த அதிமுக 2026-ல் எத்தகைய இடையூறு வந்தாலும் அதனை வென்று அதிமுக அரியணையில் ஏறும்.

ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது: ஓபிஎஸ்  அதிரடி | ops press meet at his house - Tamil Oneindia

திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். திமுகவினர் மெஜாரிட்டியாக ஆட்சி நடத்தி வருவதால் வாரிசு அரசியல் நடத்த வேண்டும் என்ற நோக்கில் பேசி வருகின்றனர். விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். விஜய் நடித்த கோட் திரைப்படம் பார்க்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தியதன் பிறகு திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவார் என நம்புகிறேன். தமிழக முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.