சபரிமலையில் ஆன்லைன் பதிவு செய்யும் பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி
சபரிமலையில் இந்த ஆண்டு ஆன்லைன் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மண்டல மகர விளக்கு பூஜைகளின் போது சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவு வருகை தந்த காரணத்தினால் பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளானார்கள் இந்த ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜைகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முடிவில் சபரிமலையில் இந்த ஆண்டு ஆன்லைன் புக்கிங் செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தினமும் 80,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஸ்பாட் புக்கிங் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.