"15- 18 வயது சிறார்களுக்கு ஒரு மாதத்திற்குள் முதல் தவணை தடுப்பூசி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 
masu

சென்னையில் 35% மக்களே மாஸ்க் அணிகின்றனர்  என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் காணொலி வாயிலாக பங்கேற்ற கூட்டத்தில்  மருத்துவ வசதிகள் , கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சிறார் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், தொற்று பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. 

masu

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  "சென்னையில் நாள்தோறும் தொற்று கூடும் அச்சம் உள்ளது.  தன்னார்வலர்களை மாநகராட்சியுடன் இணைத்து கோவிட் கேர் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரிப்பன் மாளிகையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அறை தொடங்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும். 

masu

ஒரு மாதத்திற்குள் 15- 18 வயது சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும். மத்திய அமைச்சர் உடனான கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தமிழ்நாட்டிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 35 சதவீதம் மக்கள் மட்டுமே முக கவசம் அணிகின்றனர். பொதுமக்களுக்கு பயம் தெளிந்து விட்டது . சென்னையில் கொரோனா  கட்டுப்பாட்டு பணிக்காக வாரத்துக்கு 5 பேர் வீதம் 200 வார்டுகளில் ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்" என்றார்.