அம்மாடியோவ் ரூ.402 கோடியில் நெல்லையில் மேலும் ஒரு சிப்காட்!

 
ச் ச்

திருநெல்வேலியில் மேலும் ஒரு சிப்காட் தொழில்பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

4 இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்கா- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு | TN  Budget New sipcot industrial part at 4 locations


தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் வகையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 40 தொழில் பூங்காக்கள் உள்ளது. மேலும் 21 இடங்களில் 21,404 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, திருநெல்வேலியில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.  இதன்படி, மானூர் தாலுகாவில் உள்ள பிராஞ்சேரி மற்றும் சித்தர் சத்திரம் கிராமங்களில் மொத்தம் 1184.09 ஏக்கர் பரப்பளவில் இது அமைய உள்ளது. 402 கோடி செலவில் அமைய உள்ள இந்த சிப்காட் தொழில்பூங்கா மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.