ஈரோடு நாதக வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, நேற்று மாலை சிந்தன் நகர், ஜீவா நகர் பகுதிகளில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததற்காக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்பிரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இதில் 58 வேட்பாளர்கள் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, நேற்று மாலை சிந்தன் நகர், ஜீவா நகர் பகுதிகளில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததற்காக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமீறல் குறித்து பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் சீதாலட்சுமி உட்பட 5 பேர் மீது BNS-174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஏற்கனவே ஈரோடு பேருந்து நிலையத்தில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததற்காக நாதக வேட்பாளர் உட்பட 8 பேர் மீது ஈரோடு நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவான நிலையில், அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
தேர்தல் ஆணையத்தில் முன் அனுமதி பெறாமல் இன்று காலை ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில்,
எட்டு பேர் மீதும் BNS- 171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடதக்கது.