பங்கில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்! கோவையில் பரபரப்பு

 
பங்கில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்! கோவையில் பரபரப்பு

கோவை உக்கடம் பகுதியில் உள்ள சி.என்.ஜி எரிவாயு மையத்தில், எரிவாயு நிரப்பிய ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பங்கில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்! கோவையில் பரபரப்பு


கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் தர்மராஜ் என்பவரது வாடகை ஆம்னி வேனை ஓட்டி வருகிறார். இன்று வழக்கம் போல் ஜாபர் சாதிக் ஆம்னி வேனுக்கு எரிவாயு நிரப்புவதற்காக, உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள சி.என்.ஜி எரிவாயு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது, திடீரென ஆம்னி வேன் தீ பிடிக்க எரியத் துவங்கியது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்பான் கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென எரியத் துவங்கியதால், ஊழியர்கள் சேர்ந்து எரிவாயு மையத்தின் மூலைக்கு ஆம்னி வேன் தள்ளி விட்டனர். இதையடுத்து  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  

விரைந்து வந்த கோவை தெற்கு தீயணைப்பு துறையினர், ஆம்னி வேனில் பற்றிய தீயை அணைத்தனர். அதற்குள் வேன் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது. எரிவாயு நிரப்பப்பட்ட நிலையில் அதில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.