எண்ணெய் கடாய் கவிழ்ந்து இனிப்பக கடை உரிமையாளர் பலி

 
Death

திருவள்ளூரில் இனிப்பு பலகாரம் தயாரிக்கும் போது எண்ணெய் கடாய் கவிழ்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இனிப்பாக கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

death

திருவள்ளூரில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள லட்சுமி இனிப்பகத்தை  சிவக்குமார் என்பவர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 26 ந் தேதி அன்று சிவக்குமார் மற்றும் அவருடைய மைத்துனர் இருவரும் கடையில் உள்ளே இனிப்பு பலகாரம் செய்து முடித்துள்ளனர். அப்போது அடுப்பு மீது இருந்த எண்ணெய் கடாயை கடையின் உரிமையாளர் சிவக்குமார் இறக்க முயன்ற போது  கடாய் கை தவறி கீழே விழுந்து கொதிக்கும் எண்ணெய் அவரின் உடலின்  மீது பட்டுள்ளது. 

இதனால் படுகாயமடைந்த அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்

எண்ணெய்  கடாயை தூக்க முயன்ற போது தவறி உடல் மீது எண்ணெய் பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்வீட் கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

....


"