1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு; அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!

 

1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு; அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனை நடந்தவுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கும் சூழலில் கடந்த 1ஆம் தேதி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அம்மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் 1 முதல் 8ஆம் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் பள்ளிக்கல்வித்துறை கருத்து கேட்டது. அதில் பெரும்பாலானோர், 6 முதல் 8ம்வகுப்பு வரையில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு; அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!

பள்ளிகளை திறந்து பாடம் நடத்தாவிட்டால் உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

தனியார் பள்ளிகள் பள்ளிகளை திறக்க தயாராக இருக்கும் சூழலில் அது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பெற்றோர்கள் விரும்பினால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம் என்று நிபந்தனையுடன் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.