இனி UPI மூலம் அபராதம் கட்டலாம்.. போக்குவரத்து காவல்துறை புதிய முறை அறிமுகம்..

 
போக்குவரத்து விதி மீறல் : சென்னையில் அபராதம் வசூலிப்பு

சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் செலுத்தும் முறையை மேலும் எளிமையாக்கியுள்ளது.  

சென்னை போக்குவரத்து காவல் ஆபராதம் செலுத்தும் முறையில் UPI மூலம் பணம் செலுத்த வசதிகளை மேம்படுத்தியுள்ளது.   2011 ஆம் ஆண்டிற்கு பிறகு  போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையில் புதிய மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக நேரடியாக பணம் செலுத்தும் முறையில் இருந்து  இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியது.  அடுத்தபடியாக 2017ஆம் ஆண்டில் பணமில்லா பணவரித்தனை மூலம் போக்குவரத்து சலான்களுக்கான அபராத தொகையை எளிதாக செலுத்துவதற்கு பல்வேறு வசதிகளை நடைமுறை படுத்தியது. 

அதன்படி,  டெபிட்/கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துதல், Paytm ஆப் மூலம் பணம் செலுத்துதல்,  தபால் நிலையங்களில் பணம் செலுத்துதல்,  TN e-Sevai மையங்களில் பணம் செலுத்துதல் உள்ளிட்டவை  ஏற்கனவே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் வழங்கிய போக்குவரத்து சலான்களின் கட்டணங்களுக்கு பணம் செலுத்தும்  நடைமுறையில் இருந்தன. 

நீங்க UPI பரிவர்த்தனை பண்றவங்களா?… அப்போ இந்த முக்கிய விதிய தெரிஞ்கோங்க… வங்கிகள்ட்ட ஃபைன் வாங்குங்க!

இந்நிலையில் தற்போது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் SBI வழியாக மேலே உள்ள சேவைகளுக்கு, UPI ID/QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய  முறையில் பணம் செலுத்த, பயனாளர்கள் புதிய இணையத்தளத்தையும் அறிமுகப் படுத்தியுள்ளனர். https://echallan.parivahan.gov.in/index/accused-challan இந்த  இணையதளத்தில்,UPI ID/QR குறியீடு பணம் செலுத்தலாம். 

பணம் செலுத்துவதற்கு மேலே குறிப்பிட்ட பக்கத்தில்,  
* சலான் எண், வாகன பதிவு. எண் அல்லது ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிட வேண்டும் 
* பட்டியலிடப்பட்ட சலான் அருகே "இப்போது பணம் செலுத்து" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* பின்னர் SBI ePay பக்கத்தில் UPI பயன்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த முயற்சியின் மூலம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையானது ஆன்லைன் டிஜிட்டல் கட்டண சேவை முறைகளை மேம்படுத்தியுள்ளது. இது வாகன ஓட்டிகள் தங்கள் அபராதத் தொகையை ஆன்லைன் தளங்கள் மூலம் எளிதாக செலுத்துவதற்கு வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.