இனி இந்த ரயில்களில் எல்லாம் முன்பதிவில்லாமல் பயணிக்கலாம்

 
 train

நவம்பர் 25 ஆம் தேதி முதல் பல ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Southern Railway announces 15 special trains to meet Deepavali rush- The  New Indian Express


நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக முன்பதிவில்லா ரயில் சேவை முடங்கியது. இந்த நிலையில், தற்போது கொரோனா கால சிறப்பு ரயில்கள் நிறுத்தப்படுவதாகவும், இனிமேல் பழைய நடைமுறைப்படி, பழைய எண்களில் சாதாரண பயணிகள் ரயில், மெயில்,  எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இனி பழைய கட்டணத்தில் பழைய எண்களுடன் முன்பதிவில்லா பெட்டிகளுடன் அனைத்து பாசஞ்சர், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன், சென்னை- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். இதேபோல் தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில், சென்னை செண்ட்ரல்- கோவை இண்டர்சிட்டியிலும் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.