கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் அனுமதி இல்லை

 
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் அனுமதி இல்லை

பராமரிப்பு பணி காரணமாக, கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kanyakumari glass bridge: India's first sea bridge opens to public |  Thiruvalluvar day 2024 | | Tamil Nadu News - News9live

உலக சுற்றுலா தலமான குமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிப்பதற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குமரிக்கு தினந்தோறும் வருகை தருவார்கள்.இவர்கள் கடலில் பயணம் செய்து திருவள்ளுவர் சிலை மாற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கண்டு ரசிப்பதற்காக தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின்  சார்பாக சுற்றுலா படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது.இதனிடையே கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைகளை இணைக்கும் புதிய கண்ணாடி கூண்டு பாலத்தை கடந்த 30ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். 

India's first glass bridge in the sea opens at Kanyakumari: 5 less known  facts | Today News

இதனை அடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்  கண்ணாடி கூண்டு பாலத்தில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக, 13ஆம் தேதி வரை கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ள நிலையில், கண்ணாடி பாலத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.