வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

 
rain

வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில்  புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து காரணமாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.  டெல்டாவில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு பயிர்கள் சேதமடைந்தன . தற்போது சேதமடைந்த பயிர்களை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. 

rain

பருவமழையின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது  மேற்கு, வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதுஇதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழலில் இது இலங்கைக்கும் தென் தமிழ்நாட்டில் இருக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒரே மாதத்தில் வங்க கடலில் மூன்றாவது  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகிறது என்பது குறிப்பிடதக்கது.