“ஆவணப்படத்துக்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளது”- தனுஷ் தரப்பு

 
ச்

திருமண ஆவணப்படத்துக்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும், தனது பதிப்புரிமை பெற்ற பணியை சுரண்டி, அவர்கள் வர்த்த நோக்கில் பலனடைந்துள்ளதாக நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ச்

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில், 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது எனவும், படப்பிடிப்பு காட்சிகள் 2020ம் ஆண்டே வெளியான போதும், தாமதமாக 2024 ம் ஆண்டு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் மனுவுக்கு பதிலளித்து நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பதில்மனுவில், தங்கள் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு பதிவுகள் தான் அந்த காட்சிகள் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆவணப்படத்துக்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும், தனது பதிப்புரிமை பெற்ற பணியை சுரண்டி, அவர்கள் வர்த்த நோக்கில் பலனடைந்துள்ளதால், நெட்பிலிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.