காங்கிரஸ் கட்சி இனியும் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா? - நாராயணன் திருப்பதி கேள்வி

 
narayanan thirupathy

அரசியல் குளிர்காய்ந்த காங்கிரஸ் கட்சி இனியும் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா? என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

"நவம்பர் முதல் ஜனவரி வரை மக்கள் வசிக்கவே முடியாத நகரமாக டில்லி மாறி விட்டது. இதுபோன்ற சூழலில் இனியும் நாட்டின் தலைநகராக டில்லி நீடிக்க வேண்டுமா"? என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், இவரது இந்த கருத்துக்கு தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார். 


அவர் வெளியிட்டுள்ள பதிவில், டில்லிக்கு அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் அறுவடைக்கு பின்னர் எஞ்சியுள்ளவைகளை அதாவது பயிர்க்கழிவுகளை எரிப்பதை (தும்பு எரித்தல்) (Stubble Burning) கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்ததோடு, விவசாய திருத்த சட்டத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்த நிலையில், விவசாயிகளை தூண்டி விட்டு, அந்த சட்ட்டத்தை  எதிர்த்து, பிரச்சினைகளை உருவாக்கி, வன்முறையை தூண்டி விட்டு டில்லியின் காற்றுமாசை குறைப்பதை தடுத்து, 'தும்பு எரித்தலில்' அரசியல் குளிர்காய்ந்த காங்கிரஸ் கட்சி இனியும் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.