அண்ணா பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு விடுதி நடைபெறுகிறதா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதிகள் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகின்றனவா? என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையின்போது சார் எனக்கூறி ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதிகள் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகின்றனவா? என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு விடுதி நடைபெறுகிறதா? குற்றவாளி எப்படி உள்ளே வந்தார்? காவலாளி யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.