முத்தமிழ் முருகன் மாநாடு - அனைவருக்கும் பஞ்சாமிர்தம்

 
முருகன் மாநாடு

தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் நாளை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது.

Image

பழனியில் நாளை மற்றும் நாளை மறுநாள் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் மாநாட்டை பார்வையிடலாம், அனைவருக்கும் உணவு வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் 
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் (நாளை) ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காண வருவோருக்கு அனுமதி இலவசம். பழநியில் நாளை தொடங்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்போருக்கு தலா 200 கிராம் பஞ்சாமிர்தம் வழங்கப்படும்.  2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.