நடுரோட்டில் வாலிபர் கொலை - விசிக நிர்வாகி கைது

 
க்

வாலிபரை நடுரோட்டில்  குத்தி கொலை செய்த வழக்கில் விசிக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.   சிவகங்கை மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காரைக்குடி கீழ ஊரணியைச் சேர்ந்தவர் கணேசன்.    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக இருக்கும் கணேசன் தேவகோட்டையில்  மாட்டிறைச்சி கடையும் நடத்தி வருகிறார்.  இந்த கடையை கணேசனின் மகன் நிஷாந்த் கவனித்து வந்திருக்கிறார்.

தேவகோட்டை கடைக்கு போகும்போதெல்லாம்   காரைக்குடி அருகே உள்ள ரஸ்தா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் நிஷாந்தை வழிமறித்து  அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார்.   இதை   தந்தை கணேசனிடம் ராஜ்குமார் பற்றி சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நிஷாந்த்.

ம்

 இதை அடுத்து தனது நண்பர் சுந்தர மாணிக்கத்தை அழைத்துக்கொண்டு ராஜ்குமாரை சந்திக்க சென்றிருக்கிறார் கணேசன்.  ராஜ்குமாரை சந்தித்தபின் மகனை அடிக்கடி மிரட்டி ஏன் பணம் கேட்கிறாய் என்று கேட்டிருக்கிறார்.

  இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருக்கிறது.   இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள,   கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்குமாரின் வயிற்றில் ஆவேசமாக குத்தியிருக்கிறார்.  

 இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.   இதையடுத்து அங்கு வந்த போலீசார் கணேசனையும் சுந்தரம் மாணிக்கத்தையும் கைதுசெய்து சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.