சென்னையில் தான் எனது கடைசி டி20 போட்டி- தோனி நெகிழ்ச்சி

 
ms dhoni

துபாயில் நடைபெற்ற 14 வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேப்டன் தோனி வெற்றிக்கோப்பையை சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். 

ms dhoni

இந்நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, “என்னுடைய முதல் டெஸ்ட் போட்டி விளையாடியது சென்னையில் தான், அப்போதே சென்னையுடனான என் உறவு தொடங்கிவிட்டது. சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவும், அன்பும் மிகப்பெரியது. சென்னையும் தமிழ்நாடும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டுடன் முடியவில்லை, தமிழ்நாட்டையும் தாண்டி, இந்தியாவையும் தாண்டி எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கிறது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி,


அது அடுத்த வருடமாக இருந்தாலும் சரி அல்லது 5 வருடம் கழித்து இருந்தாலும் சரி எந்து கடைசி டி 20 போட்டி சென்னை மண்ணில்தான் நடக்கும்” எனக் கூறினார்.