"33%க்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்”- எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
Oct 24, 2025, 20:17 IST1761317246660
கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்பயிர்களை கணக்கெடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், திருவாரூர் மாவட்டம், திருக்கறைவாசல் கிராமத்தில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களில், 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவீதத்திற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாகரீகமில்லால் பேசிவருகிறார். அவர்களது கட்சியை வளர்ப்பதற்காக ஏதேதோ பொய் சொல்லி வருகிறார். நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி மனப்பாடம் செய்து படித்தாலும் Fail ஆகிவிடுவார்” என்றார்.


