’14 பாலியல் வீடியோக்கள்’ பாஜகவின் பி டீம் சீமான் – எம்.பி.ஜோதிமணி தாக்கு!!

 

’14 பாலியல் வீடியோக்கள்’ பாஜகவின் பி டீம் சீமான் – எம்.பி.ஜோதிமணி தாக்கு!!

எந்த நேரமும் பாஜகவின் பி டீம் சீமான் களத்தில் குதித்து பாஜகவை காப்பாற்றி கரை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது என்று எம்.பி.ஜோதிமணி சாடியுள்ளார்.

’14 பாலியல் வீடியோக்கள்’ பாஜகவின் பி டீம் சீமான் – எம்.பி.ஜோதிமணி தாக்கு!!

பாஜகவில் பெண் நிர்வாகிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்த நிலையில் சமீபத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசுவது போன்ற வீடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கே.டி. ராகவன் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் . இந்த சூழலில் கர்நாடகா பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக சதானந்த கவுடாவின் பாலியல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “தமிழகத்தில் #பாலியல் பாஜகவின் கே டி ராகவன் பாலியல் வீடியோவைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவின் முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவின் பாலியல் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் வெளிவராத பாஜகவின் 14 வீடியோக்கள் பாஜகவின் அதிகார அச்சுறுத்தலால் முடக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் #பாலியல்பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது.பாஜகவின் உள்ளும்,வெளியிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும்.அதனால் தான் குற்றவாளிகளை பாஜக தொடர்ந்து காப்பாற்றிவருகிறது.

தமிழக மக்கள் பாஜகவிடம் எச்சரிக்கையொடு இருக்கவேண்டும்.”உலகில் யாரும் செய்யாததையா சதானந்த கவுடா செய்துவிட்டார் “என்று எந்த நேரமும் பாஜகவின் பி டீம் திரு. சீமான் களத்தில் குதித்து பாஜகவை காப்பாற்றி கரை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. நாம் தான் குறிப்பாக பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கே.டி.ராகவன் பாலியல் வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருந்த சீமான், யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். இது அவரின் தனிப்பட்ட விஷயம் என்று ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.