நிறுத்தாமல் சென்ற வேன் மோதல்.. செக்கிங் செய்ய நின்ற வாகன ஆய்வாளர் பரிதாப பலி!

 
வட்டார போக்குவரத்து ஆய்வாளர்

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ் (57). இவர் இன்று காலை 9.30 மணியளவில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு வரும் வாகனங்களை சோதனை செய்து அனுப்பிவைத்தார்.வட்டார போக்குவரத்து ஆய்வாளர்

அப்போது அவ்வழியாக வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்துமாறு கனகராஜ் சைகையால் கூறினார். ஆனால் அந்த வேன் ஓட்டுநர் வேனை நிறுத்தாமல் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த கனகராஜ், சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

van-not-stoped-during-vehicle-check-in-karur-vehicle-inspector-killed-in-high-speed-collision

விபத்து குறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வேனைக் கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.