3 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை
திருமங்கலம் அருகே மூன்று வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில், டொம்பர் இன மக்கள் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வருபவர்களாகவர். மேலும் சிறு சிறு தொழில்களை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் வசிக்கும் கவிதா- காளீஸ்வரன் தம்பதியினர், இவர்களுக்கு சஞ்சீதா என்று மூன்று வயது குழந்தையும் ,சங்கர் என்ற ஆறு வயது மகனும் இருந்த நிலையில், கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக காளீஸ்வரன் தனது மகன் ஷங்கரை அழைத்துக் கொண்டு விருதுநகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நண்பகல் வீட்டில் இருந்த மூன்று வயது குழந்தை சஞ்சிதாவை அருகாமையில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தூக்கி வீசி கொன்று விட்ட தாய் கவிதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதனால் அருகாமையில் குடியிருப்போர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை திறக்காததால், சந்தேகம் அடைந்தவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது தூக்கிட்டு கவிதா தொங்கியதைக் கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததனர். அதன் பேரில் ,கள்ளிக்குடி போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கிலிடப்பட்ட கவிதாவை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கிணற்றில் வீசி கொல்லப்பட்ட மூன்று வயது குழந்தையை கிராம மக்கள் மீட்டு குழந்தையின் உடலையும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், எதற்காக தாய் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

