விபச்சார விடுதிகளில் அதிக மாமூல் - 2 ஆய்வாளர்கள் வீடுகளில் ரெய்டு

 
p

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் ஸ்பா சென்டர் இயங்கி வருகின்றன.   பெரும்பாலான சென்டர்களில் விபச்சாரம் நடந்து வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

 சென்னையைப் பொருத்த வரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்பா செண்டர்கள் இயங்கி வருகின்றன.   ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 10 ஸ்பா செண்டர்கள் இயங்கி வருகின்றன என்று தகவல்.  

pp

 இந்த சென்டர்களில் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டிய விபச்சார தடுப்பு பிரிவு  போலீசார்,  மாமூல் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டு  பெயருக்கு மாதத்தில் ஒரு கேஸ் என்று கணக்கு காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.  

 விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் லஞ்சம் வாங்குவதில் ஆய்வாளர்களுக்கு மட்டுமே மாதம் 25 லட்சம் வரைக்கும்கூட மாமூல் கிடைக்கிறது என்றும் சொல்கிறார்கள்.  

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு ஆய்வாளராக இருக்கும் சாம் வின்செண்ட்,  என்பவரும் சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் என்பவரும் மூன்று வருடங்களுக்கு முன்னதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர்.  அப்போது அளவுக்கு அதிகமாக மாமூல் வாங்கி சொத்து சேர்த்ததாக  இவர்கள் இருவர் மீதும் பல்வேறு தரப்பினர் புகார் கூறியிருக்கிறார்கள்.

 இந்த புகார்கள் அடிப்படையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு சென்று அதன் அடிப்படையில் இன்று இருவரின் வீடுகளிலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.