"ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக ஏஜெண்டாக செயல்படுகிறார்"

ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக ஏஜெண்டாக செயல்படுவதாக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஆளுநர் ரவி தமிழகத்தில் ஆளுநராக செயல்படவில்லை. அவர் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை அழிக்க வந்துள்ளார். இன்று நாம் சமத்துவமாக பொங்கல் கொண்டாடுகிறோம். இது அவர்களுக்கு பிடிக்காது.
அண்ணாமலைக்கு பெரிய அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு இங்கே என்ன அச்சுறுத்தல் இருக்கிறது. அவர் பல்வேறு தவறுகள் செய்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் எந்த அண்ணாமலை வந்தாலும், எத்தனை மலைகள் வந்தாலும் பாஜகாவால் கால் ஊன்ற முடியாது” எனக் கூறினார்.