பேட்ச் ஒர்க் போடப்பட்ட சாலையை துடைப்பத்தால் பெருக்கி காட்டி அதிகாரிகளை வெறுத்தெடுத்த எம்.எல்.ஏ
வேலூர் அருகே பள்ளிகொண்டா பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் பேட்ச் ஒர்க் போடப்பட்ட சாலையை துடைப்பத்தால் பெருக்கி காட்டி அதிகாரிகளுக்கு சாட்டையடி கேள்வி கேட்ட அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகளுடன் நடந்து சென்று தீடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் அம்ரூத் திட்ட ஒப்பந்ததாரரிடம் "பொதுமக்களும், வியாபாரிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு என்ன பணிகள் செய்கிறீர்கள்?" என கடிந்து கொண்டார். வரும் 20-ம் தேதிக்குள் பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் அம்ரூத் திட்டப்பணிகள் விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடும் அளவிற்கு என்ன பணி செய்கிறீர்கள்..? அம்ருத் 2.0 திட்டத்தில் பேட்ச் ஒர்க் போடப்பட்ட சாலையை துடைப்பத்தால் பெருக்கி காட்டி அதிகாரிகளுக்கு சாட்டையடி கேள்வி கேட்ட அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார்..#Vellore | #DMK | #Pallikonda | #APNandaKumar |… pic.twitter.com/e0fNIjxjiY
— Polimer News (@polimernews) September 9, 2024

இதனையடுத்து பள்ளிகொண்டா - குடியாத்தம் சாலையிலுள்ள ராகவேந்திரா நகரில் போடப்பட்டுள்ள பேட்ச் ஒர்க்களை தானே துடப்பத்தை கொண்டு சுத்தபடுத்தி பேட்ச் ஒர்க் எப்படி போடப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரரிடம் “இங்கு பேட்ச் ஓர்க் சரியாக செய்துள்ளீர்கள்... இதே போல் தான் பள்ளிகொண்டா பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேச்ட் ஓர்க் போடப்பட வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் பேட்ச் ஒர்க் சரியாக செய்யவில்லை” என தெரிவித்ததுடன் இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரிடம் தெரிவித்தார்.