திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை... கமல்ஹாசனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என பல அவதாரங்களை பெற்றுள்ள கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1960 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்வை தொடங்கிய கமல்ஹாசன், நான்கு தேசிய திரைப்பட விருதுகள் , ஒன்பது தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் , நான்கு நந்தி விருதுகள் , ஒரு ராஷ்டிரபதி விருது , இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பதினெட்டு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். 1984 இல் கலைமாமணி விருது , 1990 இல் பத்மஸ்ரீ , 2014 இல் பத்ம பூஷன் மற்றும் 2016 இல் ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் (செவாலியே ) விருது ஆகியவற்றையும் வென்றுள்ளார்.
பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) November 7, 2024
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் - @maiamofficial-இன் தலைவர் @ikamalhaasan அவர்களின்… pic.twitter.com/eOmJaACRqg
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.