“திராவிட மாடலின் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை”- மு.க.ஸ்டாலின்
திராவிட மாடலின் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற #Dravidian_Model-இன் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை!நாள்தோறும் நலப்பணிகள் என நாடு போற்றும் இந்தத் துறையின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் 379 இணையர்களுக்கு வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, 31 இணையர்களை நேரில் வாழ்த்தி அகம் மகிழ்ந்தேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற #Dravidian_Model-இன் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை!
— M.K.Stalin (@mkstalin) October 21, 2024
நாள்தோறும் நலப்பணிகள் என நாடு போற்றும் இந்தத் துறையின்… pic.twitter.com/qzmatbAJ32
சென்னை திருவான்மீயூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சார்பில் 31 இனைகளுக்கான திருமண விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.