விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன்- மு.க.ஸ்டாலின்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு மாலை 5.40க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் திருச்சியில் தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர். ஆனால் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வானத்திலேயே 2 மணிநேரமாக வட்டமிட்டது. இந்நிலையில் நிலத்திலிருந்து 4,255 அடி உயரத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
I am heartened to hear that the #AirIndiaExpress flight has landed safely. Upon receiving news of the landing gear issue, I immediately coordinated an emergency meeting with officials over the phone and instructed them to implement all necessary safety measures, including…
— M.K.Stalin (@mkstalin) October 11, 2024
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். தரையிறங்கும் கியர் பிரச்சினை பற்றிய செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன். மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேலும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் இப்போது உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறக்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.