நான் தான் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர்- ஸ்டாலின் பெருமிதம்

 
mkstalin

தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Explain spike in covid cases if there's no community spread: MK Stalin to  Palaniswamy

கோவை கொடிசியா அரங்கில்  இன்று  முதலீட்டாளர்களின் முதல்  “முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதலீட்டாளர்கள் மாநாட்டில்  ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 74,835 நபர்களுக்கு  வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “ஆட்சிக்கு வந்தவுடன் அரசுக்கு சவால் கொரோனா , மழை வெள்ள பிரச்சனையில் அரசு நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி. மக்களை காப்பது அரசாங்கத்தின் வேலை. அரசு சிறப்பாக செயல்பட்டது. தொழில் துறைக்கு தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதத்தில் மூன்றாம் தொழில் முதலீட்டாளர்களின் மாநாடு தமிழ்நாடு அராங்கத்தின் மீதான நம்பிகையில் நடக்கிறது. இதே வேகத்தில் போனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக விரைவில் உருவாகும், நம்பர் 1 முதல்வர் என்பதைவிட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே தனக்கு பெருமை.

நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை. தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.