"ஊரைத் தூய்மைப்படுத்தும் உள்ளங்களுடன் சாப்பிடுவதுதான் எனக்கு பெருமை"- மு.க.ஸ்டாலின்

 
ச்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.664 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு உலகில் வாழ்கிறாரோ? திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி பேசியதை மக்கள் காமெடியாக பார்க்கின்றனர். அதிமுகவின் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. மக்கள் நலத்திட்டங்களை செய்வதால்தான் தொடர்ந்து வெற்றி பெறுகிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தியதால், அதிமுகவின் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களை பெற்றது. மக்களோடு நின்று உழைப்பதால்தான் தொடர்ந்து திமுக வெற்றி பெறுகிறது. 

ஆட்சியர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பவர்தான் நம்முடைய நாமக்கல் ஆட்சியர் உமா. ஊரை தூய்மைப்படுத்தும் உள்ளங்களுடன் சாப்பிடுவதுதான் எனக்கு பெருமை. இதுதான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பது. நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நானே நேரில் சென்று, அரசின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளேன்” என்றார்.