"இந்தியாவிலேயே தமிழ்நாட்டுப் பெண்கள் டாப்பாக உள்ளனர்"- மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் புதுமை பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு வங்கி அட்டைகளையும் வழங்கினார். புதுமை பெண் திட்ட விரிவாக்கம் மூலம் சுமார் 75 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும்.
தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதுமைப் பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் இத்தனை மாணவர்களை பார்ப்பதில் Dravidian Stock-ஆக பெருமை கொள்கிறேன். இதற்கு மாறாக ஒரு Stock உள்ளது. பெண்கள் வளர்ச்சி பிடிக்காமல் வன்மம் பிடித்த Stock ஒன்று உள்ளது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் வன்மம் பிடித்த Stock. பெண்கள் இன்னும் வீட்டில்தான் இருக்க வேண்டும் என பேசிக்கொண்டு திரிகிற எஸ்க்பரியான Stock.
பெண்களுக்கு எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வியை நீதிக்கட்சி கொண்டு வந்தது. அன்றைய சென்னை மாகாணத்தில் கல்வி புரட்சிக்கு நீதிக்கட்சி ஆட்சியில்தான் அடித்தளமிடப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் டாப்பாக உள்ளனர். மதிப்பெண்கள் பெறுவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே அதிகமாக உயர்க்கல்வியில் சேர்வதிலும் தமிழ்நாட்டு பெண்கள் டாப். உயர்க்கல்வி முடித்து வேலைக்கு போவதிலும் டாப். புதுமைப்பெண் திட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இத்தி்ட்டத்தால் மாணவிகள் கல்லூரியில் சேருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது. ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி, உயர்கல்விப் பெறாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை பெறாமல் ஓய மாட்டேன்” என்றார்.