அன்னபூர்ணா விவகாரம்- ‘வெட்கப்பட வேண்டிய ஒன்று’: மு.க.ஸ்டாலின்
அன்னபூர்ணா உரிமையாளரை மத்திய நிதி அமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அன்னபூர்ணா உரிமையாளரை மத்திய நிதி அமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கையைதான் அவர் முன்வைத்தார். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசவிருக்கிறேன்.” என்றார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நிச்சயமாக உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாக்கும்’ என்று நம்புவதாக கூறினார். மேலும் திமுக சொன்னதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும் என்றும் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.