முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணம்

 
முதலமைச்சர் 17 நாட்கள் அமெரிக்கா பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அமெரிக்காவில் முக்கியமான பல நிறுவனங்களின் தொழிலதிபர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். பல்வேறு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன என தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார். ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் முன்னணி நிறுவன தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார். ஆகஸ்ட் 29ல் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.