வெங்கையா நாயுடு இல்ல விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
Jan 31, 2025, 22:33 IST1738342988252

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இல்ல விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
மகாபலிபுரத்தில் நடைபெற்ற முன்னாள் துணை குடியரசுத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்களின் பேரன் திரு. விஷ்ணு - சத்விகா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
முன்னதாக சென்னை,நீலாங்கரையில் நடைபெற்ற திரைப்பட பாடகர் திரு. பி.உன்னிகிருஷ்ணன் அவர்களின் மகன் திரு. வாசுதேவ் கிருஷ்ணா - உத்திரா பட்டாதில் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.