தென்னிந்தியாவின் மிக நீளமான மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 
ச் ச்

தென்னிந்தியாவின் பிரமாண்டமான ஜி.டி.நாயுடு பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Image

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில், தென்னிந்தியாவின் மிக நீண்ட பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்ட நிலையில், இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இதனை திறந்து வைத்தார். ஜி.டி.நாயுடு குடும்பத்தார் இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு முதல்வரால் கெளரவிக்கப்பட்டனர். கோவையின் முன்னோடியும், இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் விஞ்ஞானியுமான ஜிடி நாயுடு அவர்களின் பெயரை, இந்த பாலத்திற்கு சூட்டி, கோவை மக்களுக்கும் ஜிடி நாயுடுக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் கௌரவம் செய்துள்ளார். 1791 கோடி மதிப்பீட்டில் ஐந்தாண்டுகளாக கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக தமிழ்நாடு மாநிலத்தின் நிதி மட்டுமே பயன்படுத்தி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கோல்ட்வின்ஸ் பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் வரையில் அவிநாசி சாலையில் நான்கு இந்த பிரம்மாண்டமான உயர்மட்ட சாலை கட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டன. 

ஜெர்மன் டெக்னாலஜி, பசுமைக்கு முக்கியத்துவம், பயணத்துக்கான விசாலமான சாலை, ஒலி மாசு இல்லாத சாலை பயணம், 250 மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் என கட்டப்பட்ட இந்த உயர்மட்ட சாலை (மேம்பாலம்) ஒரு மாடல் மேம்பாலமாக திகழும் என்று நம்புகின்றோம் என நெடுஞ்சாலை சிறப்பு திட்டங்கள் கோவை கோட்ட பொறியாளர் முனைவர் சமுத்திர கணி தெரிவித்துள்ளார்.