முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி சந்திப்பு
Feb 28, 2025, 18:55 IST1740749111000
-
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அண்ணன் மு.க.அழகிரி சந்தித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவரது அண்ணன் மு.க. அழகிரி. உடன் இருப்பவர் அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் மகன் இன்பநிதி pic.twitter.com/qyzovhWDZv
— இராமானுஜம் கி | Ramanujam K (@ramnellai) February 28, 2025
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அவரது அண்ணன் மு.க. அழகிரி. மூத்த மகள் கயல்விழியின் மகன் இன்பநிதியுடன் சென்று வாழ்த்து கூறினார் மு.க.அழகிரி.


