"உள்ளே போனால் அவ்வளவுதான்... கதை முடிந்தது" தஞ்சை பெரியக்கோயிலை கிண்டல் அடித்த அமைச்சர்கள்

 
"உள்ளே போனால் அவ்வளவுதான்... கதை முடிந்தது" தஞ்சை பெரியக்கோயிலை கிண்டல் அடித்த அமைச்சர்கள்

தஞ்சை பெரிய கோயிலுக்கு அடுத்ததாக  சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் சென்ற  பொழுதுபோக்கு பூங்காவான  சிவகங்கை பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 7 கோடி ரூபாய் நிதியில் சிறுவர்கள்  விளையாட்டு உபகரணங்கள் நடைபாதை வசதி, சிறுவர்களுக்கான நீச்சல்குளம்  என பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட தஞ்சை சிவகங்கை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் திறந்து வைத்தனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு தஞ்சை பெரியகோயிலை காட்டி உள்ளே போனால் கதை முடிந்தது என்றதும் அமைச்சர் அன்பில் மகேஷ் சிரித்தார். தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. சந்திரசேகரன், எவ்வளவோ சிரமப்பட்டு கோயிலுக்கு கூப்பிட்டார்கள், ஆனால் நான் போகவே இல்லை, 2 தொகுதிகள் அவுட், பத்திரிக்கையில் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என போய்விட்டேன் என்று சொன்னபடி சிரித்தார்.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னம் என  அறிவிக்கப்பட்டு உலக அளவில் பிரசித்த பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்குள் பிரபலமானவர் சென்றால் அவர் பதவி அல்லது உயிர் பறிபோகும் என்பது சென்டிமென்ட். இந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில்சிங், எஸ்.டி.சர்மா, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கருணாநிதி என பலரும் அடங்குவர்.