நாராயணபுரம் ஏரியில் ஆகாய தாமரைகளை அகற்றியதால் மழைநீர் வேகமாக வெளியேறுகிறது- உதயநிதி ஸ்டாலின்
பள்ளிக்கரணை – கோவிலம்பாக்கம் இடையேயுள்ள நாராயணபுரம் ஏரியின் கால்வாய்களில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகளை அகற்றி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கனமழை காரணத்தால் பள்ளிக்கரணை – கோவிலம்பாக்கம் இடையேயுள்ள நாராயணபுரம் ஏரி மற்றும் அதற்கான கால்வாய்களை நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஆய்வு செய்தோம். கோவிலம்பாக்கம் அம்பேத்கர் சாலை பாலத்தின் அருகே நாம் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கால்வாயின் மேற்கு பக்கத்தில் கரைகள் உயர்த்தப்பட்டு, ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்பட்டு உள்ளதை குறிப்பிட்ட அப்பகுதி மக்கள், மழைநீர் தடையின்றி வெளியேற ஏதுவாக கால்வாயின் கிழக்கு பக்கத்திலும் ஆகாயத் தாமரைகளை அகற்றித்தர வேண்டுமென்று நம்மிடம் கோரிக்கை விடுத்தனர்.
கனமழை காரணத்தால் பள்ளிக்கரணை – கோவிலம்பாக்கம் இடையேயுள்ள நாராயணபுரம் ஏரி மற்றும் அதற்கான கால்வாய்களை நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஆய்வு செய்தோம்.
— Udhay (@Udhaystalin) October 16, 2024
கோவிலம்பாக்கம் அம்பேத்கர் சாலை பாலத்தின் அருகே நாம் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கால்வாயின் மேற்கு பக்கத்தில் கரைகள்… pic.twitter.com/tl0fVaJ7i1
அதனடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கானப் பணிகளை நேற்று மாலை நாம் ஆய்வு செய்த போது, ஆகாயத்தாமரையை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வந்தது.இந்த சூழலில், மூன்றாவது நாளாக இன்றும் நாராயணபுரம் ஏரிக்கான நீர்வழித்தடமாக உள்ள அக்கால்வாயில் ஆய்வு செய்தோம். இன்றைய தினம் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்பட்டு, கால்வாயின் வழியாக நாராயணபுரம் ஏரி நோக்கி மழைநீர் வேகமாக வெளியேறி வருகிறது. இதற்காக இரவு-பகலாக உழைத்தப் பணியாளர்களை நேரில் பாராட்டினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.