மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது- உதயநிதி ஸ்டாலின்

 
a

நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மழையின் காரணமாக வேளச்சேரி பாலம் மற்றும் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து காவலர்கள் விதித்த அபராதங்கள் திரும்ப பெறப்படும்.  ஏரிகளில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது, சென்னையில் மழையால் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. 10 மின்மாற்றிகளில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் சீராக மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.

சென்னையில் 35 இடங்களில் முற்றிலுமாக மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. 300 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. 100 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் பணிகளை மேற்கொள்ள சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். தண்ணீர் தேங்கிய இடங்களில் மோட்டார்கள் மூலம் நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்." எனக் கூறினார்.