மானுடம் தழைக்க வள்ளுவர் வழி நடப்போம் - துணை முதலமைச்சர் உதயநிதி பதிவு

 
Udhayanidhi

மானுடம் தழைக்க வள்ளுவர் வழி நடப்போம் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

அறம் - பொருள் - இன்பம் என எக்காலத்துக்கும் பொருந்துகிற வாழ்வியல் தத்துவத்தை திருக்குறளாக தந்த அய்யன் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், குமரிக்கடலில் வான் தொடும் திருவுருவச்சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்போல் இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பேரறிவுச் சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து குமரி முனையில் இன்று மரியாதை செலுத்தினோம்.


மேலும், திருக்குறள் நெறி பரப்பும் 22 சான்றோர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, வள்ளுவர் சிலைக்கு அருகே பூம்புகார் விற்பனையகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்த போது உடன் பங்கேற்றோம். மானுடம் தழைக்க வள்ளுவர் வழி நடப்போம் என குறிப்பிட்டுள்ளார்.