தொடர் தோல்வி பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை- உதயநிதி ஸ்டாலின்

 
தொடர் தோல்வி பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை- உதயநிதி ஸ்டாலின்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அத்தியூர் சிவா(எ) சிவசண்முகத்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்ய வேண்டும். தொடர் தோல்வி பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை. பாமக நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் தொடர் வெற்றியை அளித்து வருகிறீர்கள். தேர்தல் அறிக்கையில் கூறியது போல பெட்ரோல், பால் விலையை குறைத்தோம்.

விக்கிரவாண்டி தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக 53,375 குடும்பத் தலைவிகள் பயன்பெறுகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் 16,128 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.24.43 கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.