150 அதிநவீன பேருந்துகள் சேவையை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பு

 
உதயநிதி ஸ்டாலின்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பிலான BS VI 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை, பொது மக்களின் பயன்பாட்டிற்காக சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Image


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது. புதிய பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Image

குறிப்பாக, இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளதோடு, மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட்கள், மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 150 பேருந்துகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.