திமுகவினர் மீது போடப்பட்ட 80% வழக்குகள் முடித்துவைப்பு- செந்தில் பாலாஜி

 
செந்தில் பாலாஜி

திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்கறிஞர்  அணி ஆலோசனைக் கூட்டம், திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் கேஎம்.தண்டபாணி வரவேற்புரையாற்ற,   திமுக சட்டத்துறை மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ தலைமை ஏற்க, தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மறைந்த மூத்த வழக்கறிஞர் AK.ராஜேந்திரன் திருவுருவ படத்தை  திறந்து வைத்து தலைமை உரையாற்றினார். 

minister Senthil Balaji bail: அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி  ஆஜர்! காத்திருந்து கையெழுத்திட்டார்


அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “உள்ளாட்சி தேர்தலில் ஆரம்ப கட்டம் முதல், தேர்தல் முடியும் வரை இரவு, பகல் பாராமல் உழைத்த சட்டத்துறையினருக்கும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆரம்பத்திலிருந்தே அனைத்து பணிகளையும் பார்ப்பது வழக்கறிஞர்களே, அப்போது ஏற்படும் பிரச்சினைகள் என்றாலும் சரி, வாக்குசேகரிக்கும் போதும் சரி, வாக்குசான்றை கையில் பெறும் வரை வழக்கறிஞர்களின் பணி சிறப்பானது. அதேபோல், 2026-ல் கோவையின் 10 தொகுதிகள், தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளையும்  வென்றெடுப்போம் என்ற பெருமையை அடைய வேண்டும். அந்த வெற்றி பயணத்தை துவங்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் திமுகவினர் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் 80 சதவீத வழக்குகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் எஃகு கோட்டையாக கோவை மாற வேண்டும். அந்த அளவில் நமது பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும். இங்கு இருக்க கூடி வழக்கறிஞர்களுடன் மாவட்ட நிர்வாகம் சேர்ந்து இங்கு உள்ள 10 சட்டமன்றங்களை வென்றெடுப்போம் என்ற உறுதியை கூறிக்கொள்கிறேன்” என்றார்.