மருதமலையில் 180 அடியில் முருகனுக்கு சிலை அமைக்கப்படும்- சேகர்பாபு

 
sekarbabu

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் வரும் ஏப்.4 ஆம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது லிப்ட் பணிகள் மற்றும் அன்னதான மண்டபம் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

 முருகன் மாநாடு வெற்றி-'அமைச்சர் சேகர்பாபு பேட்டி | nakkheeran

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழ் கடவுள் முருகன் கோயில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. 90 முருகன் கோயில்களில் குட முழுக்கு நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 60-70 வயது முதியவர்கள் அரசு கட்டணத்தில் அறுபடை வீடுகளில் சிறப்பு தரிசனம் செய்து கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் 7 முருகர் கோயில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் செய்யப்பட்ட வருகின்றன. பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட கோயில்களில் பெருந்த்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை மருதமலை கோயிலில் ஏற்படுத்தப்படவுள்ளன. முருகன் திருக் கோயில்களில் பக்தர்கள் அதிகரித்த வருவதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. லிப்ட் வசதி மே மாதத்தில் முழுமையாக பக்தர்கள் பயன்பாட்டு வரும். தமிழ்நாடு முதல்வர் அனுமதியோடு மருதமலை முருகன் கோயிலில் 160 அடி கல்லால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்திருக்கின்றோம். அதற்குண்டான ஆய்வில் இன்றைக்கு துறையினுடைய செயலாளர் சந்திரமகன் மாவட்ட ஆட்சியர், அரங்காவலர் குழுவினர் சிலை அமைய உள்ள இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டோம். 

தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமைக்கும், பெருமை சேர்க்கின்ற வகையில் ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகர் சிலையை இங்கே நிறுவதற்கான ஏற்பாடுகளை தொடர்வோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். வரும் 31-ஆம் தேதி பேரூர் பட்டீசுவர் கோயில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளோம். பொதுமக்கள் அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும். கோவை வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் அமைக்க உள்ளனர்.  ரூ.21 கொடி செலவில் ஏற்கனவே பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மலை ஏற்பவவர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய கூடுதல் ஏற்பாடு செய்யப்படும். தைப் பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க இந்த அரசு முடிவு செய்து, அன்னதான பிரபு ஆக முதல்வர் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு தரப்படும். பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அன்னை தமிழில் தான் குட முழுக்கு” என தெரிவித்தார்.