"பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுபவர்கள் பாஜகவினர்"- அமைச்சர் சேகர்பாபு

 
sekarbabu

தமிழக அரசும் தமிழக மக்களும் டங்ஸ்டன் திட்டத்தை  ஒரு போதும் செயல்படுத்த விட மாட்டார்கள் என எண்ணித்தான் ஒன்றிய அரசு  திட்டத்தை ரத்து செய்துள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

"கோயில்களில் விஐபி பாஸ் என்பது முற்றிலும் இல்லை" - அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் மக்களைத் தேடி பயணம் 14வது நாள் பயணமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 56-வது வார்டு பிராட்வே, அப்பாராவ் கார்டன் பகுதியில் தொடங்கி அப்பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்களுடன் பொதுமக்களிடம் குறைகளை கண்டறிந்து  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பிள்ளைகளையும் கில்லிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கலை தெரிந்தவர்கள் பாஜகவினர், ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே தனது முடிவை ஆணித்தரமாக தெரிவித்தார். நான் முதலமைச்சராக உள்ளவரையும் முதலமைச்சர் பதவியே பறிபோனாலும் கூட டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வரமாட்டேன், அதற்கு அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தார். தமிழக அரசும், தமிழக மக்களும் இந்த திட்டத்தை  ஒரு போதும் செயல்படுத்து விட மாட்டார்கள் என எண்ணித்தான் ஒன்றிய அரசு  திட்டத்தை ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக துணிவோடு களத்தில் போராடும் கட்சி  திமுக. ஆட்சியில் இருந்தாலும் இல்ல விட்டாலும் போராடும் ஒரே கட்சி திமுக” என்றார்.