உண்டியலில் விழுந்த ஐபோன் பக்தரிடம் தரப்படும்"- அமைச்சர் சேகர்பாபு

 
சேகர்பாபு

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன், உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

tn


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் கடந்த ஆறு மாதங்களுக்கு பின்பு உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் தாலி பொட்டு, கண்மலர், வேல், பண முடிப்பு, சில்லறை நாணயங்கள், கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.  இதில் 52 லட்சம் ரூபாயும் 289 கிராம் தங்கமும் 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.  இதில் தவறவிட்ட ஒரு ஐபோனும் கிடைக்கப்பெற்றுள்ளது, அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொண்டதில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருடையது என்பது தெரியவந்துள்ளது. உண்டியலில் விழுந்த பொருட்கள் சாமிக்கே சொந்தம் என்பதால் அதை திருப்பி ஒப்படைக்க மாட்டாது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

sekar babu

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று சென்னையில்செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இந்த ஆட்சி கொடுக்கின்ற ஆட்சி, எடுக்கின்ற ஆட்சியில்லை. அதிமுக கிள்ளி கூட கொடுக்காத ஆட்சி, ஆனால் இந்த ஆட்சி அள்ளி கொடுக்கின்ற ஆட்சி, ஆகவே திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன், உரிய நபரிடம் நிச்சயமாக இன்று ஒப்படைக்கப்படும்” என தெரிவித்தார்.