திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் விரைந்து வழிபாடு செய்ய ஏற்பாடு: அமைச்சர் ரமேஷ்
திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் விரைந்து வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை கோவிலில் அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்துக்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
— TVK Ramesh (@RameshOffcl) May 24, 2026
விரைவில் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிரிவலம் மற்றும் அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர். தொடர் விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதல் அண்ணாமலையார் திருக்கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “திருவண்ணாமலை கோவிலில் அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்துக்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக விரைவாக தரிசனம் செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

