தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கைக் கொண்டு வருவது சாத்தியமில்லை- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி

ஆளுநர் அரசியல்வாதியாகிவிட்டார், ராஜ்பவன் அரசியல் பவனாகிவிட்டது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மசோதாக்களை இழுத்தடிக்க ஆளுநர் ரவி முயற்சி: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  புகார் | TN Law Minister Raghupathi comments on Vice Chancellor appointment  bill - hindutamil.in

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம்தான் பெருகும். தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் என்பதையே மறந்துவிட்டு ஒரு அரசியல்வாதிபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கமலாலயத்துக்கு போட்டியாக ஒன்று இருக்கிறது என்றால் அது ராஜ்பவன் தான். ஆளுநர் என்பவர் மத்திய, மாநில அரசுக்கு நல்ல உறவை உருவாக்க வேண்டும். ஆனால் ஆளுநர் ரவி செயல்பாடு அப்படி இல்லை. மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை துண்டிக்கும் வகையில் செயல்படுகிறார். காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த ஆளுநருக்கும் கேமராமேன் கண்களுக்கும் மதுபாட்டில் தெரிந்து இருக்கிறது. அதிமுகவின் வாக்கு இன்னும் குறையத்தான் செய்யும்.


அண்டை மாநிலங்களில் மது விற்பனை இருக்கும்போது தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கைக் கொண்டு வருவது சாத்தியமில்லை. ஒருமித்தமாக அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் மதுவிலக்கை கொண்டுவர தயார். எல்லா மாநிலங்களும் சேர்ந்தால்தான் மதுவை ஒழிக்க முடியும். தமிழ்நாடு மட்டும் மதுவை ஒழிக்க முடியாது. தமிழ்நாட்டில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிது கூட கிடையாது” என்றார்.