பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு!!

 
anna

 பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறார் அமைச்சர் பொன்முடி.

anna university

தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று  வெளியாகவுள்ளது.  தமிழ்நாட்டில் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள்,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்,  தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவையும் அடங்கும்.  இந்த கல்லூரிகளில் பி.இ.,   பி டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் ஒற்றை சாளர முறையில் இணைய வழி பொது கலந்தாய்வு மூலம் இவை நிரப்பப்படும். அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணைய வழி விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி முடிவடைந்தது. இருப்பினும்  ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜூன் 11ஆம் தேதி வரை கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர்.  ஒரு லட்சத்து 98,853 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.  அவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி சமவாய்ப்பு எண் இணையவளையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 13 முதல் 30 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

Ponmudi

இந்நிலையில்  பி.இ., பி.டெக், உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடுகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.  கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பும் இன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.