“எடப்பாடி பழனிச்சாமி கண்மாயை தூர் வாரினாரா? கஜானாவை தூர் வாரினாரா?”

 
eps

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் இல்ல திருமண விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டார். 

Maalaimalar News: Tamil news minister periyakaruppan says Women are not  welcome in the amma two-wheeler

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், “கடந்த அதிமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டார்கள். வேலையில் இருந்த பலரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். காலி பணியிடங்களையும் நிரப்பாமல் சென்றுவிட்டனர். தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் கடனை அதிமுக அரசு வாங்கி வைத்துள்ளனர். இதையெல்லாம் சமாளித்து தமிழக முதல்வர் தன்னுடைய மதிநுட்பத்தால் செயல்பட்டு தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். 

அதிமுக ஆட்சியில் கண்மாய்கள் தூர்வாரியதால் தான் தற்போது கண்மாய்கள் நிரம்பி உள்ளன என எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அவர் கண்மாயை தூர் வாரினாரா? அல்லது கஜானாவை தூர் வாரினாரா? என தெரியவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சிக்கு சான்றாக திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை தமிழக முதல்வர் தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றி பெரும்” என தெரிவித்தார்.